தர்மபுரி அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு


தர்மபுரி அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு
x

குழந்தைகளுக்கு அதிகரித்து வரும் சளி,காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

தர்மபுரி

குழந்தைகளுக்கு அதிகரித்து வரும் சளி,காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

சளி-காய்ச்சல்

தமிழகத்தில் சீதோசன நிலை மாற்றத்தால் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவர்களை பாதுகாக்க பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் பெற்றோர் குழந்தைகளுடன் சிகிச்சைக்காக காத்து உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் வார்டுகளில் தற்போது கூட்டம் அலைமோத தொடங்கி உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சளி-காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பெற்றோர் கலக்கம் அடைந்துள்ளனர். குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் மற்றும் மருத்துவ செலவுகள் அதிகம் என்பதால் பெற்றோர் அரசு மருத்துவமனைகளுக்கு வர தொடங்கி உள்ளனர்.

சிறப்பு வார்டு

இதனால் குழந்தைகளுக்கு அதிகரித்து வரும் சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 40 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் மருத்துவக்குழுவினர் மற்றும் செவிலியர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளனர். மேலும் போதுமான மருந்து, மாத்திரைகளும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன..

இதனிடையே தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் சிறப்பாக வழங்கப்படுகிறது. இந்த காய்ச்சலால் பொதுமக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். காய்ச்சல் பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க பெற்றோர் எப்போது வேண்டுமானாலும் அரசு மருத்துவமனைகளுக்கு வரலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.


Next Story