முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு
விருதுநகருக்கு 15-ந் தேதி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காரியாபட்டி,
விருதுநகருக்கு 15-ந் தேதி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
செயற்குழு கூட்டம்
விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் நேற்று மல்லாங்கிணற்றில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தார்.
வருகிற 15-ந் தேதி விருதுநகருக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
முதல்-அமைச்சருக்கு வரவேற்பு
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன் மற்றும் விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட அணி நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க வரும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கவனமாக வந்து செல்ல வேண்டுமென அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.