திருமருகல் அருகே அனந்தநல்லூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
திருமருகல் அருகே அனந்தநல்லூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நாகப்பட்டினம்
திருமருகல் அருகே அனந்தநல்லூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், குங்குமம், மாப்பொடி, திரவிய பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேக செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு மாவிளக்குபூஜை செய்து வழிபட்டனர். திருமருகல் செல்லியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், வாழ்மங்கலம் மழைமாரியம்மன் கோவில், வெள்ளத்திடல் மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், சீயாத்தமங்கை கால பைரவர் கோவில், கட்டலாடி பாதாள காளியம்மன் கோவில், திருக்கண்ணபுரம் மாரியம்மன் கோவில், ஆதீனங்குடி மாரியம்மன் கோவில், அம்பல் மாரியம்மன் கோவில், பொறக்குடி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story