பக்த ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு வழிபாடு
பக்த ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர்
தஞ்சை மேலவெளி பகுதியில் பிரசித்திப்பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. ராமநவமியையொட்டி இக்கோவிலில் உள்ள பக்த ஆஞ்சநேயர் சன்னதியில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை ஆஞ்சநேயருக்கு மஞ்சள், பால், தயிர், திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதனையடுத்து பக்தஆஞ்சநேயருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சன்னதி முன்பு ராமசங்கீர்த்தனையுடன் கூடிய கலைநிகழ்ச்சி நடந்தது.
Related Tags :
Next Story