சதுரகிரி கோவிலில் சிறப்பு வழிபாடு
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வத்திராயிருப்பு,
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பிரதோஷ வழிபாடு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இ்ந்த கோவிலில் நேற்று நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு வந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நடந்து சென்றனர்.
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் இந்த பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
வெம்பக்கோட்டை
வெம்பக்கோட்டை ஒன்றியம் சத்திரம் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திக்கு பன்னீர், இளநீர், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல. ஏழாயிரம் பண்ணையில் உள்ள ஈஸ்வரன் கோவில், வெம்பக்கோட்டையில் சொக்கலிங்க சுவாமி கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆலங்குளம்
ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி சங்கரலிங்கசாமி, சிமெண்டு ஆலை காலனியில் உள்ள ஆகாய லிங்கேஸ்வரர், கண்மாய் பட்டி குபேர லிங்கேஸ்வரர், எதிர்கோட்டை துணை கண்ட லிங்கேஸ்வரர். கல்லமநாயக்கர்பட்டி யோகேஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக நந்திக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.