இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாரியம்மன் கோவில்
சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதத்தில் நடைபெறக்கூடிய ஆடிக்கடைசி வெள்ளி திருவிழா மிகவும் முக்கியமான திருவிழாவாகும்.
இந்த திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்தநிலையில் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பாதுகாப்பு ஏற்பாடு
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை பூசாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி தலைமையில் கோவில் பணியாளர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இருக்கன்குடி போலீசார் மேற்கொண்டிருந்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.