லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு


லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்தில் லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள லெட்சுமி நாராயண பெருமாள், செங்கமலத்தாயார், ஆண்டாள் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பஜனைப்பாடல்கள் பாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story