மகா காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


மகா காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே மகா காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள கோரையாறு கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் காளியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story