மகாகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


மகாகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோரையாறு மகாகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள, கோரையாறு கிராமத்தில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது மகாகாளியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story