முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

கரூர்,

கிருத்திகையை முன்னிட்டு கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள கற்பக விநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முருகனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.நொய்யல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதேபோல் வேலாயுதம்பாளையம் புகழிமலை முருகன் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், விபூதி உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story