நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி சதுர்த்தசியையொட்டி நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
நாகப்பட்டினம்
நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள நடராஜர், சிவகாமசுந்தரிக்கு புரட்டாசி சதுர்த்தசி மற்றும் பவுர்ணமி திதி நிறை பணியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக திரவியப்பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. அதேபோல் புரட்டாசி பவுர்ணமி திதி நிறை பணியை முன்னிட்டு சுந்தர விடங்க தியாகராஜருக்கு முசுக்குந்த சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story