நல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
திருத்துறைப்பூண்டி அருகே நல்லமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வெட்டுக்கட்டியில் உள்ளது நல்ல முத்து மாரியம்மன் கோவில். இக்கோவிலில் தமிழ் வருடபிறப்பை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அம்மனுக்கு மாவிளக்கு போடுதல், காவடி எடுத்தல் போன்றவை நடந்தது. பின்னர் சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story