நரசிம்மர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
திருவெண்காடு அருகே நரசிம்மர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே திருக்குறளூர் உக்கிர நரசிம்மர், மங்கை மடம் வீர நரசிம்மர், திருநகரி யோக, ஹிரண்ய நரசிம்மர்கள் மற்றும் திருவாலி லட்சுமி நரசிம்மர் கோவில்கள் என 5 நரசிம்மர் கோவில்கள் உள்ளன. நரசிம்மர் ஜெயந்தியையொட்டி இந்த நரசிம்மர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மங்கை மடம் வீர நரசிம்மர் கோவிலில் காலை ஹோமமும், பூர்ணாகுதியும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், அர்ச்சகர் பாலாஜி பட்டாச்சாரியார் செய்திருந்தனர். திருக்குறளூர் உக்கிர நரசிம்மர் கோவிலில் லட்சுமி ஹோமமும், கோ பூஜையும் நடந்தது.. திருநகரி கல்யாணரங்கநாதர் பெருமாள் கோவிலில் தனி சன்னதியில் உள்ள யோக, இரணியன் நரசிம்மர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், பக்த ஜன சபை தலைவர் ரகுநாதன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் திருவாளி லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.