பெருமாள்-ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள்-ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வாய்மேடு:
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள்-ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுநடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலம் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி அங்கி அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல உம்பளச் சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தனி சன்னதியில் அருள் பாலிக்கும் பக்த வைராக்கிய ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்காப்பு சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்
தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலம் ராம பக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், நெய், சந்தனம், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம் தோப்புத்துறை அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல நாகக்குடையான் சீனிவாச பெருமாள் கோவில், கோவில்பத்து எனையாளும் கண்ணபெருமான் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.