பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
ஆலங்குளம்
ஆலங்குளம் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், நெய், தேன், இளநீர் உள்பட 18 வகையான பொருட்களால் அபிேஷகம் நடந்தது.
அதேபோல கல்லமநாயக்கர்பட்டி சோலைமலை சுந்தரராஜபெருமாள் கோவில், காக்கிவாடன்பட்டி நாராயண பெருமாள் கோவில், புலிப்பாறைபட்டி வரதராஜபெருமாள் கோவில், கீழராஜகுலராமன் ராஜகுல பெருமாள் கோவில் ஆகிய பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.