பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூர்
தோட்டக்குறிச்சி சேங்கல்மலை வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று ஏகாதசியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்கள், துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமியை பல்லக்கில் அமரவைத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
இதேபோல நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி , பூதேவி, சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story