சவுடாம்பிகை கோவிலில் சிறப்பு வழிபாடு


சவுடாம்பிகை கோவிலில் சிறப்பு வழிபாடு
x

சவுடாம்பிகை கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை டவுன் பகுதியில்ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story