சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் பாரதிபுரம் சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திண்டுக்கல்
திண்டுக்கல் பாரதிபுரம் சீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமைதோறும் சிறப்பு வழிபாடு நடந்துவருகிறது. இதையொட்டி நேற்று சாய்பாபாவுக்கு பன்னீர், பால், இளநீர், விபூதி உள்ளிட்டவையால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதையொட்டி பக்தர்கள் சாய்பாபாவுக்கு விபூதி அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு தீபாராதணை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் பங்கேற்று பஜனை பாடல்களை பாடினர். சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கோவில் 3 வேளையும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாய்பாபாவை வழிபாடு செய்தனர்.
Related Tags :
Next Story