வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருதுநகர்
திருச்சுழி,
திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள பெருமாளுக்கு சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் எம்.ரெட்டியபட்டி, சிலுக்கப்பட்டி, லெட்சுமிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story