வரதராஜபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
வரதராஜபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
திட்டச்சேரி:
திருமருகலில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசையையொட்டி வரதராஜபெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் வரதராஜபெருமாளுக்கு மஞ்சள் பொடி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வரதராஜபெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire