வேல்முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு


வேல்முருகன் கோவிலில்  சிறப்பு வழிபாடு
x

வேல்முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அய்யாசாமி பிள்ளை தெருவில் உள்ள வேல்முருகன் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு 36-ம் ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று நடந்தது. இதனை தொடர்ந்து மாலையில் பெரிய ஏரி கரையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு திருமுருக பெருமான் வீதி உலா காட்சி நடந்தது. வீதிஉலா காட்சியின் போது பக்தர்கள் மாலை, வாழைப்பழம், தேங்காய், சூடம், சாம்பிராணி, பத்தி வைத்து படைத்து சுவாமியின் அருளை பெற்றனர்.


Next Story