வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு


வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக ருத்ரகோடீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story