விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. நாகை காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ஏழைப் பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், மாவடி பிள்ளையார், நீலா மேல வீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமன் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story