விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சங்கடஹர சதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தியையொட்டி தர்மபுரியில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அந்தந்த கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி எஸ்.வி.ரோடு சாலை விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. சாமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. இதில் இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
சிறப்பு வழிபாடு
இதேபோன்று தர்மபுரி குமாரசாமி பேட்டை சிவசக்தி விநாயகர் கோவில், செல்வகணபதி கோவில், நெசவாளர் நகர் விநாயகர் கோவில், கடைவீதி ஏலூர் பிள்ளையார் கோவில் மற்றும் அன்ன சாகரம், பாரதிபுரம், கோட்டை, மதிகோன்பாளையம் உள்ளிட்ட அனைத்து ஊர்களில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மேலும் மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.