விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் முத்தனூர், சேமங்கி மரவாபாளையம், நொய்யல், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் காகிதபுரம் வல்லபை கணபதி, புகழிமலை அடிவாரத்தில் உள்ள விநாயகர், ஓம் சக்திநகர் கற்பக விநாயகர் உள்பட பல்வேறு விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.