விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

வேலாயுதம்பாளையம் கடைவீதியில் பிரசித்தி பெற்ற செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், இளநீர், சந்தனம், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்கள், அருகம்புல்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருண கணபதி கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் காகிதபுரம், மரவாபாளையம், நொய்யல், புன்னம், நன்செய் புகழூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story