விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

நொய்யல் அருகே முத்தனூரில் வருண கணபதி கோவில் உள்ளது. சதுர்த்தியை யொட்டி வருண கணபதிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. வேலாயுதம்பாளையம் கடைவீதியில் செல்வ விநாயகர் கோவிலில் வளர்பிறை சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story