அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன்குறிச்சியில் உள்ள காளியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு இளநீர், பால், சந்தனம், திருநீரு உள்பட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கங்கரகோட்டை ஊராட்சியை சேர்ந்த மார்க்கநாதபுரத்தில் முப்புடாதி அம்மன் கோவில், கிழச்செல்லையாபுரத்தில் சுந்தாளம்மன் கோவில், செல்லியம்மன் கோவில், வன மூர்த்திலிங்கபுரம் காளியம்மன் கோவில், கோமாளிபட்டி துர்க்கை அம்மன் கோவில், சத்திரப்பட்டி மாரியம்மன் கோவில் உள்பட அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story