அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்

ஆடி 2-வது வெள்ளியையொட்டி நாகை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி 2-வது வெள்ளிக்கிழமையான நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி நாகை பால்பண்ணைச்சேரி ஜெயபத்ர காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு காய்கறி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திருமருகல்

திருமருகல் ஒன்றியத்தில் திருமருகல் மாரியம்மன் கோவில், வெள்ளத்திடல் மகா காளியம்மன், வாழ்மங்கலம் மழை மாரியம்மன், ஆதீனங்குடி மாரியம்மன் கோவில், பனங்குடி அங்காளம்மன் கோவில், அம்பல் மாரியம்மன் கோவில், அனந்தநல்லூர் மாரியம்மன் கோவில், புத்தகரம் மகாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலையிலேயே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. கோவில்களில் விளக்கு பூஜை, ஆடிவெள்ளி ஊஞ்சல் உற்சவ பூஜை, குங்கும அர்ச்சனை போன்றவை நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அம்மன்கோவிலில் நடந்த சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பனங்குடி அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

நாகூர்

நாகையை அடுத்த நாகூர் பண்டகசாலைத்தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி சம்பஸ்திர அபிஷேக, ஆராதனையும், அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆடிவெள்ளியையொட்டி நேற்று அம்பாளுக்கு அபிஷேக தீபாராதனையும், மாலை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற்றது. நாளை (ஞாயிற்றுகிழமை) இரவு அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.


Next Story