அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி கடைசி வெள்ளி

ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதம் கடைசி வெள்ளியான நேற்று கும்பகோணத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்தன.

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் துர்க்கை அம்மனுக்கு பூமாலை, எலுமிச்சை மாலைகளை அணிவித்தும், அகல்விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனர்..

பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பக்தர் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த பட்டு சேலைகளை கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டது.

இதே போல் டாக்டர் மூர்த்தி சாலையில் உள்ள ஜலசந்திர மகா மாரியம்மன் கோவில் உற்சவம் விழா நடந்தது.

முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து அக்னி கொப்பரை, சக்தி கரகம், வேல், பால் குடம், அலகு காவடிகளை எடுத்து கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். திராளன பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்தி கடன்செலுத்தினர். கும்பேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டை பைபாஸ் ரோடு - நந்தவனம் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கருப்பண்ணசாமி, மதுரை வீரன், விநாயகர் கோவிலில் ஆடி மாத திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால் குட விழா நேற்று நடந்தது. முனு்னதாக குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்ற கோவிலை வந்தடைந்தனர்.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு கஞ்சி வார்த்தலும், தீபராதனையும் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கருப்பண்ணசாமி, மதுரை வீரனுக்கு கிடா வெட்டு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story