அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணையில் உள்ள கருகாத்த கருமாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்பட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல மார்க்கநாதபுரம் முப்புடாதி அம்மன் கோவில், கீழச்செல்லையாபுரம் செல்லியம்மன் கோவில், சுந்தாளம்மன் கோவில், குகன் பாறை வனப்பேச்சி அம்மன் கோவில், மடத்துபட்டி காளியம்மன் கோவில், மேல ஒட்டம்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story