அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி கரூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கோவிலின் முன்புறம் தீபம் ஏற்றியும், உப்பை குவித்தும், சூடம் ஏற்றியும் பயபக்தியுடன் வழிபாடு நடத்தினர். பின்னர் கோவிலின் முன்பு பக்தர்கள் சார்பில் கூழ், பொங்கல் மற்றும் சுண்டல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைப்போல கரூர் பசுபதிபுரம் வேம்பு மாரியம்மன், தாந்தோணிமலை முத்துமாரியம்மன், பகவதியம்மன் கோவில், தோகைமலை பட்டி மகா மாரியம்மன், புன்னம் புன்னைவன நாயகி கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்மன், சேமங்கி மாரியம்மன், நொய்யல் செல்லாண்டி அம்மன், வேலாயுதம்பாளையம் மலை வீதி மகா மாரியம்மன், வெள்ளியணை புவனேஸ்வரி அம்மன் உள்பட கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. லாலாபேட்டை அருகே சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து உலக நன்மைக்காக 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் விவசாயம் செழிக்க வேண்டி 60 வித்வான்கள் கலந்து கொண்ட நாதஸ்வர உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story