முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதக்கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைெபற்றது. தொடர்ந்து பாலசுப்பிரமணியருக்கு வெள்ளி கிரீடம் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. குழந்தை வரம் வேண்டியும், குடும்ப பிரச்சினை தீரவும், மழை பெய்ய வேண்டியும், சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதேபோல விஜயகரிசல்குளம் வழிவிடு பாலமுருகன் கோவிலில் மாதகிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
Related Tags :
Next Story