முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூர்

நொய்யல் அருகே நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல் புகழிமலை, பாலமலை உள்பட நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story