முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், திருநீறு உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து குழந்தை வரம் வேண்டியும், கடன் பிரச்சனை தீரவும், மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும், சிறப்பு யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல விஜயகரிசல்குளத்தில் வழிவிடு பாலமுருகன் கோவிலில் மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
Related Tags :
Next Story