சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் உள்ள நந்திக்கு பால், பன்னீர், தயிர், மஞ்சள், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நந்திக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது.நொய்யல் புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் கோவிலில் ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மண்மங்கலம் மணிகண்டேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.


Next Story