சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருச்சி
சமயபுரம்:
சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள போஜீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து போஜீஸ்வரருக்கும், ஆனந்தவல்லி தாயாருக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் சமயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதசுவாமி கோவில், காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில், திருப்பட்டூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலிலும் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Related Tags :
Next Story