சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

தவுட்டுப்பாளையம் அருகே நஞ்சை புகழூரில் பிரசித்தி பெற்ற மேக பாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாதம் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் திருக்காடுதுறை மாதேஸ்வரன் கோவில், புன்னம் புன்னைவனநாதர் கோவில் உள்பட நொய்யல் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனர்.

வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.இதேபோல் தோட்டக்குறிச்சி சொக்கநாதர் கோவில், மண்மங்கலம் மணிகண்டேஸ்வரர் கோவில், நன்னீர் சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story