கோவில்களில் சிறப்பு வழிபாடு
வாசுதேவநல்லூர் பகுதியில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தென்காசி
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் மேலரதவீதியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வாசுதேவநல்லூர் காமராஜர் தெருவில் உள்ள பாலகிருஷ்ணன் சுவாமி கோவிலில் காலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்துக்கு மேற்கே மலை மீது அமர்ந்த ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story