கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குருப்பெயர்ச்சி

குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். குரு பார்த்தால் கோடி நன்மை என்பது ஜோதிட விதி. அந்த வகையில் குருப்பெயர்ச்சியையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவன்கோவில்களில் தட்சிணாமூர்த்தி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர் சொக்கநாதர் சாமி கோவில், சிவகாசி விஸ்வநாதர் சாமி கோவில், சாத்தூர் சிவன் கோவில், மல்லாங்கிணறு சென்னகேசவ பெருமாள் கோவில், சூரனூர் கைலாசநாதர் கோவில், திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி குரு பகவானுக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

சிறப்பு வழிபாடு

அதேபோல ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோவில், அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்பரர் கோவில், சொக்கநாத சுவாமி கோவில், வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாத கோவில், துலுக்கன்குறிச்சி வாழை மர பாலசுப்பிரமணியசுவாமி கோவில்களிலும் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

விருதுநகரில் உள்ள மாதா அமிர்தானந்தமயிமடத்தில நேற்று மாலை குருபெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகமும், பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாட்டில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் போன்ற ராசிகளில் பிறந்தவர்கள் பரிகார பூஜைகள் செய்தனர்.


Next Story