பங்குனி மாதபிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
பங்குனி மாதபிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
காகிதபுரம் குடியிருப்பில் சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐப்பசி மாதபிறப்பையொட்டி நேற்று சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல், பவுத்திரம் பாலமலை முருகன், வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதேபோல ஐப்பசி மாதபிறப்பையொட்டி நேற்று வேலாயுதம்பாளையத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம் கடம்பங்குறிச்சி மண்மங்கலம் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.