முருகன் கோவில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு
x

முருகன் கோவில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகக்கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் கார்த்திகையையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் உள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story