ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு

ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு
x

ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு

ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாகம்

ஈரோடு திண்டல் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வேலாயுதசாமி (முருகன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

முன்னதாக நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, முருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

சிறப்பு வழிபாடு

வைகாசி விசாகத்தையொட்டி நேற்று காலையில் இருந்தே ஈரோடு மாநகர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திண்டல் முருகன் கோவிலுக்கு வந்து முருகனை தரிசனம் செய்தனர். மேலும் சில பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

விழாவையொட்டி வள்ளி -தெய்வானை சமேத வேலாயுதசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் ஈரோடு காசிபாளையத்தில் உள்ள மலேசியா முருகன் கோவில் உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Next Story