சிவன் கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு


தேய்பிைற அஷ்டமியையொட்டி சிவன் கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

தேய்பிைற அஷ்டமியையொட்டி சிவன் கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தேய்பிறை அஷ்டமி

நாகை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அதன் ஒரு பகுதியாக நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சிம்மவாகன கால சம்ஹார பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

முன்னதாக பைரவருக்கு திரவியப்பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்புச்சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சிறப்பு வழிபாடு

அதேபோல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதேபோல் நாகூர் சொர்ண ஆகர்ஷண பைரவர், வடக்குபொய்கை நல்லூர் நாதேஸ்வரர் கோவிலில் உள்ள கால சம்ஹார பைரவர் உள்பட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பைரவர் கோவில் மகா மண்டபத்தில் சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் பைரவருக்கு பால், பன்னீர்.சந்தனம், நெய், திருநீறு, இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story