சிம்ஹாருடவாராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு


சிம்ஹாருடவாராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
x

பிளாஞ்சேரி சிம்ஹாருடவாராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் காமாட்சியம்மன் உடனாகிய கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனி கோவில் கொண்டு சிம்ஹாருடவாராகி அம்மன் அருள்பாலிக்கிறார். பஞ்சமி தினமான நேற்று காலை சிம்ஹாருடவாராகி அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம் என 16 வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு அருள் பாலித்தார். மகா தீபாராதனையும், சிறப்பு ஆராதனைகளும் கூட்டு வழிபாடும் நடந்தது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் சிவாச்சாரியார் உள்ளிட்டோர் செய்தனர். பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிம்ஹாருட வாராகி அம்மனை வழிபட்டனர். மேலும் வாழை இலையில் பச்சரிசி கொட்டி அதில் தேங்காய் நெய் தீபம் ஏற்றி ஏராளமான பெண்கள் வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம்வழங்கப்பட்டது. பஞ்சமி வழிபாடு ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் எஸ். நாகராஜசிவாச்சாரியார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story