சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு


சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு
x

திருநறையூர் ராமநாதசுவாமி கோவிலில் சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் திருநறையூரில் பருவதவர்த்தினி சமேத ராமநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு சனி பகவான் மந்தாதேவி ஜேஷ்டா தேவி ஆகிய இரு மனைவிகளுடனும், மாந்தி குளிகன் இரு புதல்வர்களுடன் குடும்ப சமேதராய் அருள் பாலிக்கிறார். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் தினமும் குளிகை காலத்தில் சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இதை முன்னிட்டு சனி பகவானுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்படும். இதன்படி நேற்று நடந்த சிறப்பு வழிபாட்டில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இரு குடும்பத்தினர் கலந்துகொண்டு சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.. சனிபகவானுக்கு பூஜைகளை கோவில் அர்ச்சகர் ஞானசேகர சிவாச்சாரியார் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம்,எள் சாதம் ஆகிய பிரசாதங்கள் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி பிரபாகரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story