ராமபக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
ஓரடியம்புலம் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ராமபக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
வாய்மேடு:
தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலத்தில் மாணிக்க பெருமாள் கோவிலில் உள்ள ராமபக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியைமுன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்..பின்னர் ஆஞ்சநேயருக்கு பன்னீர், இளநீர், மஞ்சள், தேன், நெய், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், சுப்பையன், அவை. பாலசுப்பிரமணியன், தங்க.சவுரிராஜன், ராதாகிருஷ்ணன், நகரச் செயலாளர் தங்க. கதிரவன், மாவட்ட கவுன்சிலர்கள் திலீபன், இளவரசி, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், துணை செயலாளர் பிரின்ஸ் கோபால்ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் ராம்ஸ், ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.