சிறப்பு யாக பூஜை
சிறப்பு யாக பூஜை
ராமநாதபுரம்
ராமேசுவரம்
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை எதிரே உள்ள ஸ்ரீகாஞ்சி காமகோடி சங்கரமடத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு சந்திர சேகரந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் 130-வது ஜெயந்தியை முன்னிட்டும், உலக நன்மைக்காகவும் நேற்று கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜை தொடங்கியது. 12 வேத விற்பன்னர்கள் மூலம் நவக்கிரக ஹோமம், வேத பாராயணம் மற்றும் சிறப்பு யாக பூஜையும் நடைபெற்றது. யாக பூஜை நடைபெற்ற மகாபூர்ணகுதி நிகழ்ச்சியும் நடைபெற்றன. பின்னர் சங்கர மடத்தின் சார்பாக நடைபெற்ற அன்னதானத்திலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சுந்தரம்வாத்தியார், சாட்சாஆனந்த நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story