திருவெண்காடு அகோரமூர்த்திக்கு சிறப்பு யாகம்


திருவெண்காடு அகோரமூர்த்திக்கு சிறப்பு யாகம்
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தைமாத பூர நட்சத்திரத்தையொட்டி திருவெண்காடு அகோரமூர்த்திக்கு சிறப்பு யாகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகம், அகோர மூர்த்தி அருள்பாலித்து வருகிறார். இவர் பூர நட்சத்திரத்தில் அவதரித்ததால், இங்கு மாதம்தோறும் பூர நட்சத்திர வழிபாடு நடைபெறுவது வழக்கம். நேற்று தை மாத பூர நட்சத்திரத்தையொட்டி அகோரமூர்த்திக்கு சிறப்பு யாகம் நடந்தது. இதில் மகாபூர்ணாகுதி செய்யப்பட்டு, புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story