மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்


மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்
x

ஆலங்காயத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பிற அரசு துறைகள் இணைந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்தல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவர் சங்கீதா பாரி தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி முன்னிலை வகித்தார். ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் வரவேற்று பேசினார்.

முகாமில், ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை உடல் பரிசோதனை செய்யப்பட்டது. சளி காய்ச்சல் இருமல் உள்ளிட்ட குளிர்கால தொந்தரவுகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, பஸ் பாஸ், ெரயில் பாஸ், ஊனமுற்றோர் உதவித் தொகை மற்றும் வங்கி கடனுக்கான பரிந்துரை கடிதம் வேண்டி விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனுக்குடன் நேரடியாக வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு முகாமில் ஓய்வூதியம், உதவித்தொகை, வேலைவாய்ப்பு, புதிய வீடு, வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 180 மனுக்கள் பெறப்பட்டது. முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் நன்றி கூறினார்.


Next Story